அஜித்துக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு.. திரையுலகினர் இரங்கல்..!
நடிகர் அஜித்தின் தந்தை இன்று காலை காலமானதை அடுத்து அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் என்பவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்றுமுன் அவர் சிகிச்சையின் பலன் இன்றி காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அஜித் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் இருக்கும் நிலையில் அவருடைய உறவினர்கள் நண்பர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அஜித் தந்தை சுப்பிரமணியம் அவர்களுக்கு வயது 84.