'விடுதலை' படத்தின் அதிர்ச்சியான சென்சார் தகவல்.. ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்த ’விடுதலை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் பாகம் மார்ச் 31-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ’விடுதலை’ படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’ஏ’ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள் என்ற தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ’ஏ’ சான்றிதழ் பெற்ற படம் என்பதால் 18 வயதுக்கு உட்பட்டோர் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அதிகப்படியான வன்முறை காட்சிகள் காரணமாக தான் இந்த படத்திற்கு ’ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
ஏற்கனவே வெற்றிமாறனின் ’வடசென்னை’ படத்திற்கும் ’ஏ’ சான்றிதழ் தான் கிடைத்தது என்பது தெரிந்தது. மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளன.
இசைஞானி இளையராஜா இசையில் உருவான இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, கெளதம் மேனன், பவானிஸ்ரீ, பிரகாஷ்ராஜ், ராஜீவ் மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது.