தமிழில் ஷாருக்கானின் 'பதான்': ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தமிழில் ஷாருக்கானின் 'பதான்': ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

ஷாருக்கான் நடித்த ’பதான்’ திரைப்படம் கடந்த ஜனவரி 25ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். கடந்த சில மாதங்களாக பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகர்களின் படங்கள் படுதோல்வி அடைந்து பெரும் நஷ்டத்தை கொடுத்து வந்த நிலையில் ’பதான்’ படத்தின் மிகப்பெரிய வெற்றி பாலிவுட் திரை உலகினர்களுக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

’பதான்’ திரைப்படம் வெளியாவதற்கு முன் சில சர்ச்சைகள் ஏற்பட்ட போதிலும் இந்த படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது என்பதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 1000 கோடி ரூபாய் என்ற மைல்கல்லை தொட்டு உள்ளது என்பதில் குறிப்பிடத்தக்கது. அமீர்கான் நடித்த ’டங்கல்’, எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ’பாகுபலி 2’ உள்ளிட்ட படங்கள் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இருக்கும் நிலையில் தற்போது இந்த பட்டியலில் ’பதான்’ திரைப்படம் இணைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ’பதான்’ திரைப்படம் தற்போது ஓடிடியில் நாளை அதாவது மார்ச் 22 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் அமேசான் பிரைம் வீடியோவில் ’பதான்’ படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் ஓடிடியில் இந்த படத்தை பார்க்க மிகுந்த ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான ’பதான்’ படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார் என்பதும், யாஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை ரூ.240 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES