சிங்கப்பூர் நீச்சல் குளத்தில் மிதக்கும் தமன்னா.. செம புகைப்படங்கள்..!

சிங்கப்பூர் நீச்சல் குளத்தில் மிதக்கும் தமன்னா.. செம புகைப்படங்கள்..!

நடிகை தமன்னா சமீபத்தில் சிங்கப்பூர் சென்றுள்ள நிலையில் அங்கு நீச்சல் குளத்தில் மிதக்கும் புகைப்படங்கள் உள்ளிட்ட ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அவை வைரல் ஆகி வருகின்றன.

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா என்பதும் இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு ’கேடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் விஜய்யுடன் ’சுரா’, அஜித்துடன் ‘வீரம்’ சூர்யாவுடன் ’அயன்’, தனுஷ் உடன் ‘படிக்காதவன்’ விக்ரமுடன் ‘ஸ்கெட்ச்’, விஷாலுடன் ‘ஆக்சன்’, ஆர்யாவுடன் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என பல முன்னணி பிரபலங்களுடன் தமன்னா நடித்துள்ளார். அதுமட்டுமின்றி நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பல திரைப்படங்களை நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை தமன்னா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’ஜெயிலர்’ சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் ’அரண்மனை 4’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை தமன்னா சிங்கப்பூரில் உள்ள சென்டோசோ என்ற தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் நீச்சல் குளத்தில் மிதக்கும் புகைப்படம் உட்பட பல்வேறு புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் பதிவு செய்த ஒரு மணி நேரத்தில் சுமார் 2 லட்சம் லைக்ஸ் குவிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES