செல்வராகவனை சந்தித்தாரா ஐஸ்வர்யா ரஜினிகாந்த்? விரைவில் நல்ல செய்தி?

செல்வராகவனை சந்தித்தாரா ஐஸ்வர்யா ரஜினிகாந்த்? விரைவில் நல்ல செய்தி?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் செல்வராகவனை சந்தித்ததாகவும் விரைவில் நல்ல செய்தி வரும் என்றும் கூறப்படுகிறது.

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ’லால் சலாம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக செய்திகள் வெளியானது என்பதையும் பார்த்தோம்.

விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் அவரது தங்கையாக நடிகை ஜீவிதா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க செல்வராகவனிடம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் விரைவில் இது குறித்து நல்ல செய்தி வரும் என்றும் கூறப்படுகிறது.

செல்வவராகவனிடம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் என்பதும் தனுஷை பிரிந்தாலும் அவர் செல்வராகவனுடன் நல்ல நட்புடன் தான் இருந்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் சமீப காலமாக நடிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வரும் செல்வராகவன் ’லால் சலாம்’ படத்திலும் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LATEST News

Trending News