ராகவா லாரன்ஸின் 'ருத்ரன்' படத்தின் முக்கிய அப்டேட்.. ரிலீஸ் எப்போது?
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகிய ‘ருத்ரன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்து சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்
நடிகரும், நடன இயக்குனரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாரிப்பாளர் கதிரேசன் தயாரிப்பில் உருவாகி வந்த திரைப்படம் ருத்ரன். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தது. ஆனால் கிராபிக்ஸ் பணிகள் மற்றும் படப்பிடிப்பு தாமதம் காரணமாக ரிலீஸ் செய்து தள்ளி வைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் முழுமையான படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்துள்ளாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி இந்த படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராகவா லாரன்ஸ், சரத்குமார், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்து இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.