நாளை 'ஏகே 62' அதிகாரபூர்வ அறிவிப்பா? லைகா டுவிட்டால் பரபரப்பு..!

நாளை 'ஏகே 62' அதிகாரபூர்வ அறிவிப்பா? லைகா டுவிட்டால் பரபரப்பு..!

அஜித் நடிக்க இருக்கும் 62வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சற்றுமுன் நாளை ஒரு மிகப்பெரிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக லைகா நிறுவனம் ட்வீட் செய்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜீத்தின் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் ’ஏகே 62’. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தை தயாரிக்க இருக்கும் லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் சற்று முன் நாளை காலை 10.30 மணிக்கு மிகப்பெரிய ஆச்சரியமான அறிவிப்பு வெளியாக இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து ’ஏகே 62’ படத்தின் அறிவிப்பாக தான் இருக்கும் என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கப்படும் என்று கூறப்படும் நிலையில் நாளை டைட்டிலுடன் உடன் கூடிய ‘ஏகே 62’ படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றும் அது அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைசாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

LATEST News

Trending News