மால டம் டம்… மஞ்சர டம் டம்… நடிகை மிருணாளினியின் மாலத்தீவு பீஸ் போட்டோஷூட்..!
விஷால் நடித்த ’எனிமி’ என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற மால டம் டம்… மஞ்சர டம் டம்… என்ற பாடலில் நடிகை மிருணாளினி தற்போது மாலத்தீவில் சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில் தனது இன்ஸ்டாவில் மாலத்தீவில் எடுக்கப்பட்ட பீச் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.
விஜய் சேதுபதி நடித்த ’சூப்பர் டீலக்ஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மிருணாளினி . அதன் பிறகு அவர் 'சாம்பியன்’, ‘எனிமி’, ‘எம்ஜிஆர் மகன்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தார் என்பதும் கடந்த ஆண்டு விக்ரம் நடித்த ’கோப்ரா’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பதும் தெரிந்ததே.
விஷால் நடித்த ’எனிமி’ திரைப்படத்தில் இடம்பெற்ற மால டம் டம்… மஞ்சர டம் டம்… என்ற பாடலுக்கு செம ஆட்டம் மிருணாளினி நடனத்தை அனைவரும் பாராட்டினர் என்பதும் இந்த பாடலுக்கு பல திரையுலக பிரபலங்கள் நடனம் ஆடி தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை மிருணாளினி மாலத்தீவு சுற்றுலா சென்றிருக்கும் நிலையில் அங்கிருந்தபடியே பீச் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பதும் ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.