வாணி ஜெயராம் இறந்தது எப்படி? பிரேத பரிசோதனை அறிக்கையில் முக்கிய தகவல்..!

வாணி ஜெயராம் இறந்தது எப்படி? பிரேத பரிசோதனை அறிக்கையில் முக்கிய தகவல்..!

பிரபல பின்னாடி பாடகி வாணி ஜெயராம் நேற்று காலமான நிலையில் அவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்பட பல அரசியல் தலைவர்களும் அனைத்து திரையுலகினர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

மேலும் வாணி ஜெயராம் நேற்று மர்மமான முறையில் மரணமடைந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும் பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்னர்தான் அடுத்த கட்ட விசாரணை தொடங்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி பிரேத பரிசோதனை அறிக்கையில் ’வாணி ஜெயராம் கீழே விழுந்ததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் அதன் காரணமாகவே அவர் உயிர் இழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாணி ஜெயராம் வீட்டில் உள்ள படுக்கைக்கு அருகே இருந்த இரண்டு அடி உயர மேஜை மீது அவர் விழுந்தது தான் அவரது மரணத்திற்கு காரணம் என்றும் சந்தேகப்படும்படியான எதுவும் இல்லை என்றும் பிரே த பரிசோதனை அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதை அளிக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து காவல்துறை மரியாதை உடன் வாணி ஜெயராம் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES