'தளபதி 67' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. படக்குழுவினர் யார் யார்?

'தளபதி 67' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. படக்குழுவினர் யார் யார்?

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று செய்திகள் வெளியானதை பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன்னர் ’தளபதி 67’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ அதிகாரப்பூர்வமாக இந்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மாஸ்டர், வாரிசு ஆகிய படங்களை அடுத்து மூன்றாவது முறையாக தளபதி விஜய் அவர்களுடன் இணைவதை பெருமையாக கருதுகிறது.

‘தளபதி 67’ என தற்போதைக்கு கூறப்படும் இந்த படத்தை ’மாஸ்டர்’ இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். லலித், ஜெகதீஷ் ஆகிய இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 2ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ’மாஸ்டர்’ படத்திற்கு பிறகு மீண்டும் தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் இணைந்துள்ளனர்.

மேலும் தளபதி விஜய் நடித்த ’கத்தி’ ’மாஸ்டர்’ ’பீஸ்ட்’ ஆகிய படங்களை அடுத்து ’தளபதி 67’ படத்தில் இசையமைப்பாளராக ராக்ஸ்டார் அனிருத் அவர்கள் இணைந்துள்ளார். மேலும் இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் பின்வருமாறு:

ஒளிப்பதிவாளர்: மனோஜ் பரமஹம்சா

சண்டை பயிற்சியாளர்: அன்பறிவ்

படத்தொகுப்பாளர்: பிலோமின் ராஜ்

கலை இயக்குனர்: சதீஷ்குமார்

நடன இயக்குனர்: தினேஷ்

வசன எழுத்தாளர்: லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி

நிர்வாக தயாரிப்பாளர்: ராம்குமார் பாலசுப்பிரமணியன்

மேலும் ’தளபதி 67’ படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். இவ்வாறு இந்த அறிகையில் கூறப்பட்டுள்ளது.

LATEST News

Trending News