சைனீஸ் கேர்ள் மாதிரி இருக்கு... ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் புகைப்படம்!
நடிகையும், பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் பிரபலம் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பது தெரிந்ததே. அவருக்கு இன்ஸ்டாகிராமில் 2.6 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் ஃபாலோயர்களின் விருப்பத்திற்கு இணங்க அவர் தினந்தோறும் பதிவு புகைப்படங்கள் கலக்கலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன்னர் ரம்யா பாண்டியன் வித்தியாசமான கெட்டப்புடன் உள்ள புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். இதுவரை வெளியான ரம்யா பாண்டியன் புகைப்படங்கள் கிளாமருடன் தூக்கலாக இருக்கும் என்ற நிலையில் தற்போது அவர் கிட்டத்தட்ட ஒரு சைனீஸ் கேர்ள் போன்ற கெட்டப்பில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் ரம்யா பாண்டியன் நடித்த ’நண்பகல் நேரத்து மயக்கம்’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது அவர் ’தேன்’ இயக்குனர் கணேஷ் நாயக் என்பவரது இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தில் பிக்பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னர் ஆரவ் நாயகனாக நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.