விஜய்யின் 'தளபதி 67': அர்ஜூனின் வேற லெவல் லுக்!
தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கி வரும் ’தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் காஷ்மீரில் நடைபெற இருப்பதாகவும் இதில் விஜய், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் இந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது ’தளபதி 67’ படத்தில் நடிக்கும் ஆக்சன் கிங் அர்ஜுனன் கெட்டப் குறித்த புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில் இந்த வேற லெவல் கெட்டப் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
நீண்ட மிசையுடன் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் அர்ஜூனின் இந்த கெட்டப்பை பார்க்கும்போது, ‘தளபதி 67’ படத்தில் அவரது கேரக்டரும் வித்தியாசமாக, இதுவரை அவர் நடித்திராத கேரக்டராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் ஜோடியாக த்ரிஷா நடிக்கும் இந்த படத்தில் சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை லலித் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.