துணிவு பட நடிகர் டான்ஸர் ரமேஷ் தற்கொலை! 10வது மாடியில் இருந்து குதித்து உயிரிழப்பு

துணிவு பட நடிகர் டான்ஸர் ரமேஷ் தற்கொலை! 10வது மாடியில் இருந்து குதித்து உயிரிழப்பு

டிக்டாக் உள்ளிட்ட தளங்களில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி பிரபலமானவர்கள் பலரும் சினிமாவிலும் நுழைந்து இருக்கிறார்கள். அப்படி நடனம் ஆடி இணையத்தில் பிரபலம் ஆனவர் தான் டான்ஸர் ரமேஷ்.

அவர் தனது குடும்பம் வறுமையில் இருப்பதாகவும், சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாமல் இருந்ததாகவும் கடந்த வருடம் பேட்டி கொடுத்திருந்தார். தனது குழந்தையை படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு அனுப்பி விட்டதாகவும் அவர் கூறி இருந்தார்.

துணிவு பட நடிகர் டான்ஸர் ரமேஷ் தற்கொலை! 10வது மாடியில் இருந்து குதித்து உயிரிழப்பு | Tiktok Fame Dancer Ramesh Dies By Suicide

 

தற்கொலை

எனக்கு நடனம் மட்டும் தான் தெரியும், வாய்ப்புகள் கிடைக்கவில்லை என சொல்லி அவர் கண்ணீருடன் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜீ தமிழின் டான்ஸ் ஷோ ஒன்றில் கலந்து கொண்ட அவர், அதன் பின் அவர் துணிவு, ஜெயிலர் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். 

அவருக்கு குடிப்பழக்கம் இருக்கும் நிலையில் அவரது இரண்டு ம்னைவிகளுடன் அடிக்கடி சண்டையும் போட்டு வந்ததாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் தற்போது டான்சர் ரமேஷ் திடீரென 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். போலீசார் தற்போது இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். இவரது தற்கொலை அனைவருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

துணிவு பட நடிகர் டான்ஸர் ரமேஷ் தற்கொலை! 10வது மாடியில் இருந்து குதித்து உயிரிழப்பு | Tiktok Fame Dancer Ramesh Dies By Suicide

LATEST News

Trending News

HOT GALLERIES