அதுக்கெல்லாம் கவலைப்பட எனக்கு நேரமில்லை. பிக்பாஸ் ஃபினாலே கமல் காஸ்ட்யூமர் டிசைனர் ஆவேசம்!

அதுக்கெல்லாம் கவலைப்பட எனக்கு நேரமில்லை. பிக்பாஸ் ஃபினாலே கமல் காஸ்ட்யூமர் டிசைனர் ஆவேசம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலேவில் கமல்ஹாசனின் நெட்டிசன்களால் கேலியும் கிண்டலும் செய்யப்பட்ட நிலையில் அதையெல்லாம் பார்த்து கவலைப்பட தனக்கு நேரமில்லை என அந்த காஸ்ட்யூமை வடிவமைத்த டிசைனர் கூறியுள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்று முன்தினம் முடிவடைந்தது என்பதும், இதில் அசீம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக ஹவுஸ் ஆப் கதர் என்ற புதிய முயற்சியை எடுத்துள்ள கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கதர் ஆடையை அணிந்து வருகிறார் என்பதும் அவரது காஸ்ட்யூம் மிகச் சிறப்பாக இருப்பதாக பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பதும் தெரிந்ததே.

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டியில் கமல்ஹாசன் அணிந்து வந்த பெயிண்ட் அடிக்கப்பட்ட உடை நெட்டிசன்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானது. இந்த நிலையில் இந்த ஆடையை வடிவமைத்த டிசைனர் அமிர்தா என்பவர் இது குறித்து பேசிய போது, ‘கமல் சாரின் விருப்பத்தின்படி தான் இந்த ஆடை தயாரிக்கப்பட்டது, இந்த காஸ்டியூம் தயாரானதும் அவர் தனக்கு வாழ்த்து தெரிவித்தார் என்றும் கூறினார்.

மேலும் இந்த காஸ்ட்யூம் டிசைன் செய்தவுடன் ஜாக்சனிடம் கொடுத்து பெயிண்ட் செய்யச் சொன்னேன், வடசென்னை, அசுரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் சிறப்பாக பணியாற்றிய அவர், தான் நினைத்தபடியே ஆடைக்கு பெயிண்ட் செய்து கொடுத்தார் என்றும் ஆடையில் பெயிண்ட் அடிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல என்றும் அது ஒரு கலை என்றும் தெரிவித்தார்.

கமல் அவர்களே இந்த ஆடையை பார்த்து ’குட் ஜாப்’ என பாராட்டினார், அதுவே எனக்கு போதும், சமூக வலைதளங்களில் இந்த காஸ்டியூம் கேலி செய்யப்படுவதை பற்றி கவலைப்பட எனக்கு நேரமில்லை, கலையை கலையாக தான் பார்க்க வேண்டும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஆடையை வேறு யாராவது திரும்ப பண்ண சொல்லுங்கள் பார்ப்போம் என்றும் அவர் சவால் விட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES