'பத்து தல' நடிகரின் புதிய படத்தில் சரத்குமார்... டைட்டில் போஸ்டர் ரிலீஸ்!

'பத்து தல' நடிகரின் புதிய படத்தில் சரத்குமார்... டைட்டில் போஸ்டர் ரிலீஸ்!

’பத்து தல’ திரைப்படத்தில் சிம்புவுடன் நடித்த கௌதம் கார்த்திக்கின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தில் சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவராக உள்ளார் என்பதும் அவர் சிம்புவுடன் நடித்த ’பத்து தல’ என்ற திரைப்படம் வரும் மார்ச் மாதம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கெளதம் கார்த்திக் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ’கிரிமினல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கௌதம் கார்த்திக் உடன் சரத்குமார் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார். தட்சிணாமூர்த்தி ராமர் என்பவரது இயக்கத்தில் இந்த படம் உருவாக உள்ளது.

செல்வகுமார் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தை பாரா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்க மற்ற நட்சத்திரங்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ளதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அடுத்த கட்ட அப்டேட் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES