எம்ஜிஆர் உருவத்தை பச்சை குத்தி கொண்டாரா விஷால்? என்ன காரணம்?

எம்ஜிஆர் உருவத்தை பச்சை குத்தி கொண்டாரா விஷால்? என்ன காரணம்?

மக்கள் திலகம் எம்ஜிஆர் மறைந்து பல வருடங்கள் ஆகிவிட்டாலும் இன்றளவும் பல அரசியல் கட்சிகள் அவரது பெயரைச் சொல்லி தான் ஓட்டு வாங்கி வருகின்றன. எம்ஜிஆரின் பிறந்தநாளை பொதுமக்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு எம்ஜிஆர் என்ற பெயர் ஒவ்வொரு தமிழ்நாட்டு மக்களின் மனதிலும் நிறைந்துள்ள ஒரு சொல்லாகும்.

இந்த நிலையில் நடிகர் விஷால் திடீரென தனது நெஞ்சில் எம்ஜிஆர் உருவத்தை பச்சை குத்தியதாக வெளிவந்திருக்கும் புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டது. உண்மையாகவே அவர் எம்ஜிஆர் உருவத்தை பச்சை குத்தி கொண்டாரா? அல்லது தற்போது அவரது நடித்து வரும் ’மார்க் ஆண்டனி’ என்ற படத்திற்காக பச்சை குத்திக் கொண்டாரா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு விரைவில் பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புரட்சித் தலைவரின் தீவிர ரசிகர் என விஷால் ஏற்கனவே பலமுறை கூறியிருக்கும் நிலையில் தற்போது விஷால் தனது நெஞ்சில் எம்ஜிஆர் உருவத்தை பச்சை குத்தி இருக்கும் புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. எம்ஜிஆரின் தீவிர ரசிகர்கள் மற்றும் விஷால் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை ரசித்து வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES