நிக்காம முன்னேறு.. கண்ணோரம் ஏன் கண்ணீரு... ஷிவினுக்கு பிக்பாஸ் நெகிழ்ச்சியான பாடல்!

நிக்காம முன்னேறு.. கண்ணோரம் ஏன் கண்ணீரு... ஷிவினுக்கு பிக்பாஸ் நெகிழ்ச்சியான பாடல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கும் ஐந்து போட்டியாளர்களையும் பெருமைப்படுத்தும் விதமாக ஒவ்வொரு போட்டியாளருக்கும் மலரும் நினைவுகளை பிக்பாஸ் ஏற்ப்படுத்தி தருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

இன்றைய முதல் புரமோவில் அமுதவாணனுக்கு பெருமை சேர்த்த பிக்பாஸ், இரண்டாவது புரமோவில் மைனாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த நிலையில் தற்போது ஷிவினுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பிக்பாஸ் கூறும் வீடியோ அடுத்த புரமோவில் வெளியாகியுள்ளது.

இதில் ‘ஷிவின் உங்களால் இந்த வீட்டிற்கும், இந்த நிகழ்ச்சிக்கும், ஏன் ஒரு முழு சமூகத்திற்கும் பெருமை’ என்று கூறுகிறார். இதனை கேட்டு நெகிழ்ச்சியுடன் ‘மிகவும் நன்றி’ என்று கூறியதோடு, ‘நான் வந்த வேலை முடிந்து விட்டது என்ற நினைக்கிறேன்’ என்று கூறுகிறார்.

இதனை அடுத்த பிக்பாஸ், ‘இனி நீங்கள் எந்த ஊருக்கும் போய் ஒளிய வேண்டாம், நீங்கள் வெளியே காலடி எடுத்து வைத்து வைக்கும் போது பல தாய்மார்கள் உங்களை அவங்க வீட்டுப்பெண் தான் என நினைச்சு வரவேற்பார்கள்’ என்று கூறினார்.

இதனை அடுத்து ஷிவின் ஆனந்த கண்ணீருடன் தனது நன்றியை சொல்லிக் கொண்டிருக்கும் போது பின்னணியில் ’நிக்காம முன்னேறு, கண்ணோரம் ஏன் கண்ணீரு’ என்ற பாடல் ஒலிக்கிறது. சூர்யா நடித்த ’ஜெய் பீம்’ படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் இந்த புரமோ வீடியோவுக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES