'துணிவு' வெற்றிக்கு பின் மஞ்சுவாரியர் செய்த முதல் வேலை இதுதான்.. வைரல் புகைப்படம்

'துணிவு' வெற்றிக்கு பின் மஞ்சுவாரியர் செய்த முதல் வேலை இதுதான்.. வைரல் புகைப்படம்

அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது என்பதும் 200 கோடி ரூபாய் என்று மைல்கல்லை இந்த படத்தின் வசூல் நெருங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’துணிவு’ படத்தில் அஜித்தை அடுத்து மஞ்சு வாரியரின் கேரக்டர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது என்பதும் அவரது அதிரடி ஆக்சன் காட்சிகள் பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அஜித்துடன் அதிரடி ஆக்சன் காட்சிகளில் நடித்த மஞ்சு வாரியார் ’துணிவு’ படப்பிடிப்பின் போது அவருடன் லடாக் வரை பைக் பயணமும் செய்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ’துணிவு’ படத்தின் வெற்றியை அடுத்து மஞ்சுவாரியர் முதல் வேலையாக கேரளாவில் இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கான லைசென்ஸ் பெற்றுள்ளார். எர்ணாகுளம் ஆர்டிஓ அலுவலகத்தில் அவர் லைசென்ஸ் பெரும் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

எனவே இனி அஜித்தை போலவே அடிக்கடி மஞ்சுவாரியரையும் டூவீலரில் அடிக்கடி பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News