ஒரு மணி நேரத்திற்குள் ரஞ்சிதமே சாதனையை தகர்த்த 'சில்லா சில்லா'
அஜித் ரசிகர்கள் எல்லோரும் காத்துக்கொண்டிருந்த துணிவு படத்தின் முதல் பாடல் சில்லா சில்லா இன்று மாலை 6.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
ஜிப்ரான் இசையில் அனிருத் பாடி இருக்கும் பாடலை தற்போது அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
ரஞ்சிதமே சாதனையை முறியடித்தது
சில்லா சில்லா பாடல் வெளியாகி ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே விஜய்யின் வாரிசு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே சாதனையை முறியடித்து இருக்கிறது.
ரஞ்சிதமே பாடல் 500k லைக்ஸ் பெற கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆன நிலையில் தற்போது துணிவு படத்தின் சில்லா சில்லா 47 நிமிடங்களிலேயே 500k லைக்ஸ் பெற்று சாதனை படைத்து இருக்கிறது.