சென்னை மழையில் நனைந்த ஷிவானியின் காந்தப்பார்வை: வீடியோவை பார்த்து சொக்கி போன ரசிகர்கள்!

சென்னை மழையில் நனைந்த ஷிவானியின் காந்தப்பார்வை: வீடியோவை பார்த்து சொக்கி போன ரசிகர்கள்!

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருவார் என்பதும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள சுமார் மூன்றரை மில்லியன் ஃபாலோயர்களுக்கு அவை மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்றுமுன் யுவன்சங்கர்ராஜா உருவான பாடலின் பின்னணியில் சென்னை மழையில் நனைவது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். காந்த பார்வையுடன் அவர் கொடுத்துள்ள மழையில் நனையும் போஸ் காட்சிகள் இந்த வீடியோவில் இருப்பதை அடுத்து அதை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் சொக்கிப்போய் உள்ளனர்.

இந்த வீடியோ பதிவு செய்த ஒரு மணி நேரம் கூட ஆகாத நிலையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ் குவிந்து உள்ளது என்பதும் ஏராளமான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ‘இந்த மாதிரி பார்த்தா யாருக்கு வேணும்னாலும் காதல் வரும்’ போன்ற கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘டிஎஸ்பி’, வடிவேலுவின் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ உள்பட மூன்று படங்களில் ஷிவானி நாராயணன் நடித்து வருகிறார் என்பதும், இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது

LATEST News

Trending News

HOT GALLERIES