நான் ஆசைப்பட்டும் படம் பண்ண முடியாத இரண்டு ஹீரோக்கள், ஒண்ணு விஜய், இன்னொன்று...: சுந்தர் சி

நான் ஆசைப்பட்டும் படம் பண்ண முடியாத இரண்டு ஹீரோக்கள், ஒண்ணு விஜய், இன்னொன்று...: சுந்தர் சி

நான் படம் பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டும் முடியாத இரண்டு ஹீரோக்கள் இருக்கிறார்கள், அவர்களில் விஜய் ஒருவர் இன்னொருவர்.. என சுந்தர் சி நேற்று நடந்த திரைப்பட விழாவில் கூறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால் நடிப்பில் உருவான ‘கலகத்தலைவன்’ படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பல பிரபலங்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நிலையில் அவர்களில் ஒருவராக இயக்குனர் சுந்தர் சி கலந்து கொண்டார்.

அவர் இந்த நிகழ்ச்சியில் பேசும்போது, நான் படம் பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்ட இரண்டு ஹீரோக்களில் ஒருவர் விஜய், இன்னொருவர் உதயநிதி ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலினுடன் படம் பண்ண ஒரு வாய்ப்பு வந்தது வந்தது. அந்த படம்தான் ’தீயாய் வேலை செய்யணும் குமாரு’. ஆனால் ஒருசில காரணங்களால் அந்த படத்தில் உதயநிதி நடிக்கவில்லை. ஆனாலும் அந்த படத்தை அவர் வேறொரு ஹீரோவுக்கு விட்டுக் கொடுத்தார். அந்த படம்தான் சூப்பர் ஹிட் ஆகியது என்று சுந்தர் சி கூறினார்.

மேலும் தற்போது தயாரிப்பாளர்கள் நிம்மதியாக படத்தை எடுத்து அதை ரிலீஸ் செய்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான். அதற்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES