யோவ் கேமிராமேன் போன ஜென்மத்துல புண்ணியம் பண்ணியிருக்கய்யா: யாஷிகாவின் பதிவுக்கு வேற லெவல் கமெண்ட்!
நடிகை யாஷிகாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பார்த்த நெட்டிசன் ஒருவர் 'யோவ் கேமராமேன், போன ஜென்மத்துல நீ ஏதோ புண்ணியம் பண்ணி இருக்கய்யா, நல்லா இரு’ என கமெண்ட் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரும் தமிழ் திரைப்பட நடிகையுமான யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் பிரபலம் என்பதும் அவருக்கு சுமார் 4 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை யாஷிகா அவ்வப்போது உச்சகட்ட கிளாமர் காட்சிகளுடன் கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார் என்பதும் அவை இணையதளங்களை ஸ்தம்பிக்க வைக்கும் என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் பதிவு செய்துள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் உச்சகட்ட கிளாமருடன் கூடிய மேலாடையை அணிந்து உள்ளார். இந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலாகி வரும் நிலையில் அவருடைய புகைப்படத்திற்கு இணையாக நெட்டிசன்களின் கமெண்ட்ஸ்களும் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த ஒரு நெட்டிசன், 'யோவ் கேமராமேன், போன ஜென்மத்துல நீ ஏதோ புண்ணியம் பண்ணி இருக்கய்யா, நல்லா இரு’ என்று பதிவு செய்துள்ளார். இதேபோல் ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகியுள்ளன என்பதும் ஒருசில கமெண்ட்ஸ்கள் எல்லை மீறியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை யாஷிகா தற்போது ’இவன்தான் உத்தமன், ‘ராஜபீமா’ ’பாம்பாட்டம்’ உள்பட 5 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.