"இப்பதான் பாத்தேன்".. 'ரஞ்சிதமே' முழு வீடியோ பார்த்துட்டு தமன் போட்ட ட்வீட்!

"இப்பதான் பாத்தேன்".. 'ரஞ்சிதமே' முழு வீடியோ பார்த்துட்டு தமன் போட்ட ட்வீட்!

தளபதி விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தின் 'ரஞ்சிதமே' பாடல்  வீடியோ காட்சி குறித்து இசையமைப்பாளர் தமன் ட்வீட் செய்துள்ளார்.

Thaman Tweet about Vijay Varisu Ranjithame Full Video Song

Also Read | "நீங்க நார்மலா பேசுங்க".. ஒருவழியா ராபர்ட் மாஸ்டரிடம் போட்டு உடைத்த ரச்சிதா.. ரிசல்ட் என்ன.?

தளபதி விஜய்யின் நடிப்பில் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி வருகிறார்.

 

'வாரிசு' படத்தை  தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறது.

Thaman Tweet about Vijay Varisu Ranjithame Full Video Song

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

இந்த படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு  சில வாரங்களுக்கு முன் சென்னையில் துவங்கி உள்ளது. இதில் இரண்டு சண்டைக் காட்சிகள் மற்றும் இரண்டு பாடல் காட்சிகள் இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பில் படமாக்கப்பட உள்ளன என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Thaman Tweet about Vijay Varisu Ranjithame Full Video Song

இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடல் "ரஞ்சிதமே"  வெளியாகியுள்ளது.

இந்த பாடலை நடிகர் விஜய் & மானசி பாடியுள்ளனர். ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். தமன் இசையில் பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதி உள்ளார்.

Thaman Tweet about Vijay Varisu Ranjithame Full Video Song

இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பாடல் குறித்து இசையமைப்பாளர் தமன், "ரஞ்சிதமே முழு வீடியோ இப்போ தான் பார்த்தேன். தியேட்டர் சீட்ல யாருமே உக்காரமாட்டீங்க. டாட். உங்களோடு நானும் ஒரு ரசிகனா" என ட்வீட் செய்துள்ளார்.

LATEST News

Trending News