'துணிவு' படத்தின் முக்கிய பணியை முடித்த அஜித்.. 'ஏகே 62' படத்திற்கு தயாராகிறாரா?
அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில், ஜிப்ரான் இசையில், போனிகபூர் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’துணிவு’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை மஞ்சுவாரியார் உள்பட அனைவரும் கடந்த சில நாட்களாக டப்பிங் செய்து வந்த நிலையில் சமீபத்தில் அஜித்தும் தனது பகுதி டப்பிங் பணியை செய்து வருவதாக தகவல்கள் கசிந்தன.
இந்த நிலையில் தற்போது அஜித் தனது பகுதி டப்பிங் பணிகளை முழுமையாக முடித்துவிட்டதாகவும் இத்துடன் ’துணிவு’ படத்திற்கான அவரது பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில், லைகா தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகயிருக்கும் ’ஏகே 62 படத்திற்கு அவர் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. ‘ஏகே 62’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கயிருக்கும் நிலையில் அதற்குள் அஜித் ஒரு பைக் பயணம் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
‘துணிவு’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள ரெட் ஜெயின்ட் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளது. அஜித், மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, வீரா, ஜான் கொகைன், அமீர், பாவனி உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் தமிழ் சினிமாவின் எதிர்பார்ப்புக்குரிய ஒரு படம் ஆகும்.