நயன்தாராவுக்கு பிரியாணி விருந்து கொடுத்து அசத்தியது யார் தெரியுமா? வைரல் புகைப்படம்!

நயன்தாராவுக்கு பிரியாணி விருந்து கொடுத்து அசத்தியது யார் தெரியுமா? வைரல் புகைப்படம்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு அவரது கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் பிரியாணி விருந்து கொடுத்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 2016ஆம் ஆண்டு முறைப்படி ரிஜிஸ்டர் திருமணம் செய்து கொண்ட விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதிகள் கடந்த ஜூன் மாதம் உலகம் அறிய திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் சமீபத்தில் வாடகைத் தாய் மூலம் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்த நிலையில் இது குறித்த சர்ச்சைகளும் பரபரப்பாகி பின்னர் அரசு கொடுத்த விளக்கத்தை அடுத்து முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் இரட்டை குழந்தைகள் பிறந்ததை அடுத்து விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு பிரியாணி விருந்து வைத்துள்ளதாக தெரிகிறது. சென்னையில் உள்ள பிரபலமான ரெஸ்டாரண்ட் ஒன்றுக்கு நயன்தாராவை அழைத்துச்சென்று சீரகச் சம்பா பிரியாணி விருந்து கொடுத்துள்ளார் விக்னேஷ் சிவன். பிரியாணி விருந்து முடிந்தவுடன் அந்த ஹோட்டலின் ஊழியர்களுடன் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்  வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவன், அஜித்தின் ‘ஏகே 62’ படத்தின் ஆரம்பகட்ட பணியில் பிசியாக இருப்பதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது

LATEST News

Trending News

HOT GALLERIES