வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தில் இணைந்த 4 பிரபல நட்சத்திரங்கள்!

வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தில் இணைந்த 4 பிரபல நட்சத்திரங்கள்!

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் நான்கு பிரபல நட்சத்திரங்கள் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘மாநாடு’ திரைப்படத்திற்கு பின்னர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் நாகசைதன்யா நாயகனாகவும், கீர்த்தி ஷெட்டி நாயகியாகவும் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் 4 பிரபல நட்சத்திரங்கள் இணைந்து இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

இந்த படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி முக்கிய கேரக்டரில் இணைந்துள்ளார். அதே போல் இந்த படத்தில் நடிகர் சம்பத்ராஜ், நடிகர் பிரேம்ஜி அமரன் மற்றும் நடிகர் வெண்ணிலா கிஷோர் ஆகியோரும் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் இந்த படத்தில் யார் யார் இணைவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஏற்கனவே இந்த படத்தின் வில்லனாக ஜீவா நடிக்க இருப்பதாகவும் மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் அரவிந்த்சாமி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுவதால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இசையமைக்கும் இந்தப் படத்தை ஸ்ரீ நிறுவனம் சில்வர் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

LATEST News

Trending News