முதல்முறையாக சந்தானம் செய்த முயற்சி: 'கிக்' படம் குறித்த சூப்பர் தகவல்!

முதல்முறையாக சந்தானம் செய்த முயற்சி: 'கிக்' படம் குறித்த சூப்பர் தகவல்!

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகராக இருந்த சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்த பல படங்கள் வெற்றிப் படங்களாக உள்ளன என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சந்தானம் நடித்து வரும் படங்களில் ஒன்று ‘கிக்’. இந்த படத்தை பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கி வருகிறார். ‘தாராள பிரபு’ படத்தில் நடித்த தான்யா ஹோப் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற "சனிக்கிழமை வருகிறான்" என்ற பாடலை நடிகர் சந்தானம் பாடியுள்ளார். தான் நடிக்கும் படத்திற்காக முதல்முறையாக சந்தானம் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விவேகா எழுதிய இந்த பாடலின் லிரிக் வீடியோ அக்டோபர் 10ஆம் தேதி மாலை 6.03 மணிக்கு வெளியாக உள்ளது.

ஹீரோ சந்தானம் மற்றும் ஹீரோயின் தன்யா ஹோப் ஆகிய இருவரும் டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி எந்த நேரமும் எலியும் பூனையும் மோதும் கதையம்சம் கொண்ட இந்த படம் காமெடி மற்றும் ரொமான்ஸ் கலந்தது என்பதும் சந்தானத்தையும் மக்கள் எப்படி பார்க்க வேண்டும் என்று விரும்பினார்களோ, அது போன்ற கதை என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தில் தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், ராகினி திவேதி உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார்கள். சுதாகர் ராஜ் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

LATEST News

Trending News