'பொன்னியின் செல்வன்' நான்கு நாட்கள் வசூல்.. இந்த வாரத்திற்குள் ரூ.500 கோடியை எட்டுமா?

'பொன்னியின் செல்வன்' நான்கு நாட்கள் வசூல்.. இந்த வாரத்திற்குள் ரூ.500 கோடியை எட்டுமா?

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த மாதம் 30ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் முதல் நாளே இந்த படம் ரூபாய் 80 கோடி வசூல் செய்து சாதனை செய்தது என்பதையும் பார்த்தோம்.

மேலும் மூன்றே நாட்களில் இந்த படம் 200 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் நான்காவது நாள் வசூலையும் சேர்த்து இந்த படம் 250 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் இருப்பதால் இந்த படத்திற்கு குடும்பம் குடும்பமாக ஃபேமிலி ஆடியன்ஸ் கூட்டம் வந்து கொண்டிருப்பதால் இந்த வாரத்திற்குள் இந்த படத்தின் மொத்த வசூல் 500 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் இதுவரை வெளியான திரைப்படங்களில் கமல்ஹாசனின் ’விக்ரம்’ படம் 450 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள நிலையில் அந்த படத்தின் லைஃப்டைம் வசூலை ’பொன்னியின் செல்வன்’ 10 நாட்களில் முறியடித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் வசூல் வேறு எந்த படத்தாலும் முறியடிக்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய வசூலை எட்டும் என டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன.

அதுமட்டுமின்றி ’பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகத்தின் மிகப்பெரிய வெற்றி, இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது என்பதும் அதனால் ’பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தின் வசூலை, இரண்டாம் பாகம் மட்டுமே முறியடிக்க வாய்ப்பு உள்ளது என்றும் டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன.

LATEST News

Trending News