'நானே வருவேன்' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? கலைப்புலி எஸ் தாணுவின் அதிரடி முடிவு!
தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகிய ’நானே வருவேன்’ என்ற திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. ஊடகங்கள் மற்றும் சமூக வலைதள விமர்சகர்கள் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுத்ததை அடுத்து இந்த படத்திற்கு ஃபேமிலி ஆடியன்ஸ் கூட்டம் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் ’நானே வருவேன்’ படம் முதல் நாளில் 10 கோடியே 12 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் பத்திரிகை ,ஊடக , ரசிகர்கள் பாராட்டுகளுடன் வெற்றி நடை போடுகிறது.
இந்த நிலையில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் இயக்குனர் செல்வராகவனை நேரில் சென்று சந்தித்து தனது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார். மேலும் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
‘மேலும் ‘நானே வருவேன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து மீண்டும் செல்வராகவனுடன் ஒரு படத்தில் இணைய தயாரிப்பாளர் தாணு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.