'பொன்னியின் செல்வன்' ஐஸ்வர்யாராய்.. இதற்கு முன் அவர் நடித்த தமிழ் படங்கள் ஒரு பார்வை!
மணிரத்னம் இயக்கிய ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் 30-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தமிழில் ரீ-என்ட்ரி ஆகியுள்ளார் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய். நந்தினி மற்றும் மந்தாகினி ஆகிய கேரக்டர்களில் நடித்துள்ள ஐஸ்வர்யாராய் நடிப்பினை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ படத்திற்கு முன்னர் அவர் நடித்த தமிழ் படங்கள் குறித்து தற்போது பார்ப்போம்
1. இருவர்: மணிரத்னம் இயக்கத்தில் மோகன்லால், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்த இந்த படத்தில் தான் ஐஸ்வர்யா ராய் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனந்தன் என்ற கேரக்டரில் நடித்த மோகன்லாலின் காதலியாக ஐஸ்வர்யாராய் நடித்து இருப்பார் என்பதும் அவரது நடிப்பு மற்றும் டான்ஸ் இந்த படத்தில் மிக அபாரமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
2. ஜீன்ஸ்: பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ஐஸ்வர்யாராய் மதுமிதா மற்றும் வைஷ்ணவி ஆகிய இரண்டு கேரக்டர்களில் மாறி மாறி நடித்து இருப்பார். பிரசாந்த் நடித்த இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
3. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்: பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவான படம் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’. மம்முட்டி, அஜித், அப்பாஸ், தபு உள்பட பலரது நடிப்பில் உருவான இந்த படத்தில் ஐஸ்வர்யாராய் முதலில் அப்பாஸ் காதலியாகவும் பின்னர் மம்முட்டியை திருமணம் செய்யும் கேரக்டரில் நடித்திருப்பார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
4. குரு: தொழிலதிபர் அம்பானியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தில் அபிஷேக் பச்சன் ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தான் அபிஷேக்-ஐஸ்வர்யா ராய் காதல் மலர்ந்தது என்பதும், அதன்பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
5. ராவணன்: மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தில் விக்ரம், பிரித்விராஜ்,கார்த்திக், பிரபு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்திந்தனர். இந்த படத்தில் பிருத்திவிராஜ் மனைவியாக நடித்திருந்த ஐஸ்வர்யா ராய், தன்னை கடத்தி வைத்திருந்த விக்ரம் மீது அன்பு கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது கேரக்டர் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் ஐஸ்வர்யா ராய் நடிப்பு சிறப்பாக பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
6. எந்திரன்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தப் படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியானது. இதில் ஐஸ்வர்யாராய் சனா என்ற கேரக்டரில் நடித்து இருப்பார் என்பதும் அவரது நடிப்பு மற்றும் டான்ஸ் இந்த படத்தின் மிகச் சிறப்பாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழில் நடித்துள்ள நிலையில் இந்த படத்தில் அவருடைய நடிப்பு எப்படி இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.