கூல் சுரேஷ் நடிக்கும் படத்தின் டைட்டிலே 'சிம்பு'வா? வைரல் போஸ்டர்!

கூல் சுரேஷ் நடிக்கும் படத்தின் டைட்டிலே 'சிம்பு'வா? வைரல் போஸ்டர்!

பிரபல நடிகர்களின் திரைப்படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்த்து விமர்சனம் செய்யும் கூல் சுரேஷ் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளதை அடுத்து அந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் வெளியான சிம்புவின் ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்த்து பாசிட்டிவ் விமர்சனங்களை வெளியிட்டவர் கூல் சுரேஷ் என்பதும் இதனால் மகிழ்ச்சி அடைந்த சிம்பு தனது அடுத்த படத்தில் அவருக்கு வாய்ப்பு தருவேன் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் கூல் சுரேஷ் மூன்று கெட்டப்புகளில் இருக்கும் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. ‘எஸ்.டி.ஆர்’ என்ற டைட்டிலுடன் ’சுரேஷ் டேக்ஸ் ரெவஞ்ச்’ என்ற டேக் உடன் வெளியாகியுள்ள இந்த போஸ்டரில் சிம்பு ஸ்டைலில் அவர் மூன்றுவிதமான கெட்டப்புகளில் இருக்கிறார்.

கூல் சுரேஷ் நடிக்கும் திரைப்படத்தின் போஸ்டரா? அல்லது போட்டோஷூட்டா என்று உறுதியாக தெரியவில்லை தெரியவில்லை என்றாலும் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News