கேட்டவுடனே ஒரு லட்ச ரூபாய் அக்கவுண்டில் போட்ட பிரபல நடிகர்: போண்டாமணிக்கு குவியும் உதவிகள்!

கேட்டவுடனே ஒரு லட்ச ரூபாய் அக்கவுண்டில் போட்ட பிரபல நடிகர்: போண்டாமணிக்கு குவியும் உதவிகள்!

இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காமெடி நடிகர் போண்டா மணிக்கு உதவிகள் குவிந்து வரும் நிலையில் பிரபல நடிகர் ஒருவர் உதவி கேட்ட உடனே ஒரு லட்ச ரூபாய் அவரது அக்கவுண்டுக்கு அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் குழுவில் இருந்த நடிகர்களில் ஒருவர் போண்டாமணி என்பதும் இவர் பல படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர்போண்டாமணி திடீரென இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உதவி செய்ய வேண்டும் என நடிகர் பெஞ்சமின் உள்பட பலர் கேட்டுக் கொண்டனர்.

சமீபத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் போண்டாமணியை நேரில் சந்தித்து அவருடைய மருத்துவச் செலவை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் போண்டாமணிக்கு உதவி தேவை என்று கேட்ட உடனே அவரது அக்கவுண்டுக்கு ரூபாய் ஒரு லட்சம் ரூபாயை நடிகர் விஜய் சேதுபதி அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தனது அறக்கட்டளை மூலம் போண்டாமணிக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார். மேலும் நடிகர் வடிவேலு தன்னால் முடிந்த உதவியை செய்வேன் என செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து அவருக்கு உதவிகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News