ஃபர்ஸ்ட்லுக்கை தூக்கி சாப்பிடும் செகண்ட்லுக்: 'துணிவு' செகண்ட்லுக்கில் மாஸ் அஜித்!

ஃபர்ஸ்ட்லுக்கை தூக்கி சாப்பிடும் செகண்ட்லுக்: 'துணிவு' செகண்ட்லுக்கில் மாஸ் அஜித்!

அஜித் நடித்து வரும் 61வது படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது என்பதை பார்த்தோம். ‘துணிவு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகப்பெரிய அளவில் இணைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தூக்கி சாப்பிடும் அளவுக்கு சற்றுமுன் ‘துணிவு’ செகண்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இணையதளங்களில் வெளியிட்டு உள்ளனர். இந்த போஸ்டரில் அஜித்தின் அட்டகாசமான போஸ் உள்ளதை அடுத்து இந்த போஸ்டரை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

மேலும் நீண்ட காத்திருப்புக்கு பின்னர் தொடர்ச்சியாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், செகண்ட்லுக் போஸ்டர் என வெளியாகியுள்ளது அஜித் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. இதேபோல் மேலும் சில அப்டேட்டுக்கள் அடுத்தடுத்து வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித், மஞ்சுவாரியர் நடிப்பில் ஜிப்ரான் இசையில் போனி கபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் அல்லது தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் தொடங்க உள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES