'ஏகே 61' அட்டகாசமான டைட்டில் மற்றும் அஜித்தின் மாஸ் லுக்!

'ஏகே 61' அட்டகாசமான டைட்டில் மற்றும் அஜித்தின் மாஸ் லுக்!

அஜித் நடித்து வரும் ‘ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை ஆறு முப்பது மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே தகவல்கள் வெளி வந்தது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன்னரே இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இதில் இந்த படத்திற்கு ‘துணிவு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் அஜித்தின் அட்டகாசமான ஸ்டைலிஷ் போஸ் இந்த போஸ்டரில் உள்ளதை அடுத்து அஜித் ரசிகர்கள் இந்த போஸ்டரை கொண்டாடி வருகின்றனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் அஜித் நடித்து வரும் படத்தின் டைட்டில் ’துணிவு’ என்ற அப்டேட் வந்துள்ளதை அடுத்து அஜித் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் மேலும் அடுத்தடுத்து இந்த படத்தின் அப்டேட்டுக்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News