உலகின் முதல் வித்தியாசமான தொழிலை தொடங்கிய அர்ஜூன் மகள்: வாழ்த்து கூறிய பிரபலம் யார் தெரியுமா?
உலகில் இதுவரை யாருமே செய்யாத புதுவித பிசினஸை ஆக்சன் கிங் அர்ஜுன் மகள் தொடங்கியுள்ளதை அடுத்து அவருக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்களுக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா ஆகிய 2 மகள்கள் உள்ளனர் என்பதும் ஐஸ்வர்யா ஏற்கனவே திரையுலகில் பிரபலம் ஆகியுள்ள நிலையில் அந்த தற்போது அஞ்சனா தொழில் அதிபராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் பெண்களின் ஹேண்ட்பேக் தயாரிக்கும் தொழிற்சாலையை தொடங்கியுள்ளார். உலகில் பல ஹேண்ட்பேக் தயாரிக்கும் தொழிற்சாலை இருந்தாலும் உலகிலேயே முதல் முறையாக பழ தோலில் இருந்து தயாரிக்கப்பட்ட ஹேண்ட்பேக்குகளை தயாரிக்கும் பிசினஸை அஞ்சனா தொடங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிறுவனத்தின் தொடக்கவிழாவில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தராஜன் கலந்துகொண்டு அர்ஜுன் மகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.