40 கோடி பட்ஜெட், 8 கோடியில் ரயில் விபத்து காட்சி: வெற்றிமாறனின் வேற லெவல் படப்பிடிப்பு
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ’விடுதலை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் பாகம் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தில் சூரி, விஜய்சேதுபதி, ராஜீவ் மேனன் உள்ளிட்டவர்கள் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படம் 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தொடங்கப்பட்டது என்றும் தற்போது ரூ.40 கோடிக்கும் அதிகமாக செலவாகி விட்டது என்றும் கூறப்படுகிறது. இந்த படம் காவல்துறையினர் பயிற்சி பெறும் காலங்களில் நடைபெறும் சம்பவங்கள் குறித்த கதையம்சம் கொண்டது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்த படத்திற்காக ரூபாய் 8 கோடிக்கு மேல் செலவு செய்து இரயில் விபத்து காட்சி படமாக்கப்பட இருப்பதாகவும் அடுத்த மாதம் படமாக்கப்பட இருக்கும் இந்த காட்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
மொத்தத்தில் ‘விடுதலை’ திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் நினைத்ததை விட பல மடங்கு பிரம்மாண்டமாக வேற லெவலில் எடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.