பார்சிலோனாவில் பளபளக்கும் கிளாமர், நயன்தாராவா இது? இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பார்சிலோனாவில் பளபளக்கும் கிளாமர், நயன்தாராவா இது? இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபத்தில் தனது கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் பார்சிலோனா சென்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் பார்சிலோனாவில் இருக்கும் நயன்தாராவின் புகைப்படம் ஒன்றை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

 

ஜெயம் ரவி நடிப்பில் அகமதி இயக்கத்தில் உருவாகி வரும் ’இறைவன்’ என்ற படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பை முடித்து விட்ட நயன்தாரா, சமீபத்தில் தனது கணவர் விக்னேஷ் சிவன் உடன் பார்சிலோனா சென்றார். அவர் விமானத்தில் செல்லும் போது எடுத்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலானது

இந்த நிலையில் சற்று முன் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்சிலோனாவில் இருக்கும் நயன்தாராவின் புகைப்படங்களைபதிவு செய்துள்ளார். ’டல்லடிக்கும் ரத்தினமே மினுமினுக்கும் முத்தாரமே’ என்ற கேப்ஷனுடன் அவர் பதிவு செய்துள்ள இந்த புகைப்படத்தில் நயன்தாரா செம கிளாமர் உள்ளார். பார்சிலோனாவில் பளபளவென நயன்தாரா இருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES