நம்பர் ஒன் இடத்தை பெற்ற அமலாபால்: மகிழ்ச்சியில் பதிவு செய்த டுவிட்!

நம்பர் ஒன் இடத்தை பெற்ற அமலாபால்: மகிழ்ச்சியில் பதிவு செய்த டுவிட்!

அமலாபால் நடித்து தயாரித்த ’கேடவர்’ என்ற திரைப்படம் நம்பர் ஒன் இடத்தை பெற்றதையடுத்து அவர் மகிழ்ச்சியில் பதிவு செய்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை அமலாபால் நடித்த ’கேடவர்’ திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது என்பதும் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த வாரம் ரிலீசான படங்களில் தரவரிசை குறித்து செய்தி வெளியாகியுள்ளது. அதில் அமலாபால் நடித்த ’கேடவர்’ திரைப்படம் முதலிடத்தை பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் அருண் விஜய் நடித்த ’தமிழ் ராக்கர்ஸ்’ என்ற வெப்தொடர், மூன்றாவது இடத்தில் ’யானை’ நான்காவது இடத்தில் ’விருமன்’ படங்கள் பெற்று உள்ளது.

இந்த வாரம் ரிலீசான படங்களில் முதலிடத்தை ’கேடவர்’ படம் பெற்றது எடுத்து நடிகை அமலாபால் தனது மகிழ்ச்சியை டுவிட்டரில் வெளிப்படுத்தி உள்ளார். ’கேடவர்’ திரைப்படத்தில் பத்ரா என்ற கேரக்டரில் மிகவும் சூப்பராக அமலாபால் நடித்திருக்கிறார் என்பதும் அதுல்யா ரவியை கொலை செய்து அவரது இதயத்தை திருடி இன்னொருத்தருக்கு பொருத்தும் மோசடியை வெளிப்படுத்தும் உடற்கூறு ஆய்வாளராக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES