நெப்போட்டிஸம் குறித்த கேள்விக்கு நெத்தியடி பதில் கொடுத்த அதிதிஷங்கர்!
சினிமா துறையில் நெப்போட்டிஸம் அதிகமாகி வருவது குறித்த கேள்விக்கு பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர் நெத்தியடி பதில் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர், கார்த்தியுடன் நடித்த ’விருமன்’ திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இருப்பதாக டிரேடிங் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் முதல் படமே வெற்றிப் படமாகியதால் அதிதிஷங்கர் மிகவும் சந்தோஷமாக உள்ளார். ஆனால் அதே நேரத்தில் அவருக்கு கிடைத்த இந்த வாய்ப்பு அவரது தந்தையால் தான் என்ற விமர்சனமும் எழுந்து வருகிறது.
இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் கூறியபோது, ‘ அப்பாவின் உதவியால் முதல் படத்தில் வேண்டுமானால் வாய்ப்பு கிடைத்து இருக்கலாம். ஆனால் அதே நேரத்தில் சினிமா இண்டஸ்ட்ரியில் எனக்கான ஒரு இடத்தை உருவாக்குவது என் கையில் மட்டுமே இருக்கிறது என்று நம்புகிறேன் என்று கூறினார்.
வாரிசு நடிகர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் சரக்கு இல்லை என்றால் ரசிகர்கள் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்றும், முதல் படத்திற்கு மட்டுமே ஒருவரின் அப்பா உதவ முடியும் என்றும் தொடர்ந்து இண்டஸ்ட்ரியல் நீடித்து நிலைக்க வேண்டுமென்றால் தனித்திறமை வேண்டும் என்றும் அவர் நெத்தியடியாக பதில் கூறியுள்ளார்.
முதல் படமே எனக்கு கிராமத்து கதையம்சம் கொண்ட படமாக இருந்ததால் நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பினேன் என்றும், அந்த நம்பிக்கை வீண் போகவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.