விருமன் திரைவிமர்சனம்

விருமன் திரைவிமர்சனம்

முத்தையா இயக்கத்தில் இரண்டாம் முறையாக கார்த்தி நடித்து சூர்யா தயாரித்து இன்று வெளிவந்துள்ள திரைப்படம் விருமன். இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். முத்தையா - கார்த்தி கூட்டணியில் இதற்குமுன் வெளிவந்த கொம்பன் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. இதனால், அதே கூட்டணியில் வெளிவந்துள்ள விருமன் திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மாபெரும் எதிர்பார்ப்பு வைத்திருந்தனர். ரசிகர்களின் முழு எதிர்பார்ப்பையும் விருமன் திரைப்படம் பூர்த்தி செய்ததா? இல்லையா? வாங்க பார்க்காலம்..

கதைக்களம்

கதாநாயகன் {விருமன்} கார்த்தியின் கண்முன் அவரது தாய் {முத்துலட்சுமி} சரண்யா தீயில் எரிந்து மரணமடைகிறார். தனது தாயின் மரணத்திற்கு காரணம் தனது தந்தை பிரகாஷ் ராஜ் என்பதினால், சிறு வயதிலேயே தந்தையின் மேல் கோபம் கொண்டு கொலை செய்ய முயற்சி செய்கிறார் விருமன்.

ஆனால், மருமகனின் வாழ்க்கை வீணாகி விடுமோ என்று எண்ணி கார்த்தியை அவருடைய தந்தையிடம் இருந்து தனியாக அழைத்து செல்கிறார் தாய் மாமன் ராஜ்கிரண். பல வருடங்கள் கழித்து மீண்டும் தனது தந்தையை சந்திக்கும் கார்த்தி அதே கோபத்துடன் இருக்கிறார்.

விருமன் திரைவிமர்சனம் | Viruman Review

 

இது ஒரு புறம் இருக்க, தனது மூன்று பிள்ளைகளின் வாழ்க்கைக்கு எதுவும் செய்யாமல், தன்னை நம்பி மட்டுமே அவர்கள் பிழைக்க வேண்டும் என்று என்னும் பிரகாஷ் ராஜிடம் இருந்து தனது அண்ணன்கள் மூன்று போரையும் மீட்க போராடுகிறார் கார்த்தி. இந்த போராட்டத்தில் கார்த்தி என்னென்ன இன்னல்களை சந்தித்தார். தந்தையின் மேல் கார்த்திக்கு இருந்த கோபம் தணிந்ததா? என்பதே படத்தின் மீதி கதை..

படத்தை பற்றிய அலசல்

கிராமத்து கதைக்களத்தில் வழக்கம் போல் நக்கல் கலந்த மாசான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் கார்த்தி. ஆக்ஷன், செண்டிமெண்ட், காதல், எதார்த்தம் என தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் தனி நிற்கிறார். கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள அதிதி ஷங்கரின் நடிப்பு ஓகே. நடனத்தில் பின்னியெடுக்கிறார்.

எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அப்படியே மாறிவிடுகிறார் பிரகாஷ் ராஜ். மண்மனம் மாறாத நடிப்பில் மிரட்டியெடுக்கிறார் ராஜ்கிரண். சரண்யா பொன்வண்ணன், வடிவுகரசியின் அனுபவ நடிப்பு கச்சிதம். சூரியின் நகைச்சுவை ஓரளவு ஒர்கவுட் ஆகியுள்ளது. ஆர்.கே. சுரேஷ் சண்டைக்காக மட்டுமே படத்தில் வருகிறார். மற்றபடி மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், சிங்கம்புலி, மைனா நந்தினி ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை அழகாக செய்தியுள்ளனர்.

 

விருமன் திரைவிமர்சனம் | Viruman Review

நடிகர்களின் நடிப்பு படத்திற்கு பலமாக இருந்தாலும், இயக்கம், திரைக்கதை இரண்டிலும் சொதப்பியுள்ளார் இயக்குனர் முத்தையா. காலம் கடந்துபோன கதைக்களம், பிற்போக்கு தனமான வசனங்கள் என சலிப்பு ஏற்படும் வகையில் அமைந்துள்ளது விருமன். யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள், பின்னணி இசை படத்திற்கு பலம். செல்வகுமாரின் ஒளிப்பதிவு மிரட்டுகிறது. வெங்கட்ராமின் எடிட்டிங் சூப்பர்.

க்ளாப்ஸ்

கார்த்தி நடிப்பு

யுவன் பாடல்கள், பின்னணி இசை

எடிட்டிங்

ஒளிப்பதிவு

பல்ப்ஸ்

காலம் கடந்துபோன கதைக்களம்

முத்தையாவின் இயக்கம்

பிற்போக்கு தனமான வசனங்கள்

மொத்தத்தில் விருமனா? இல்லை கொம்பன் படத்தின் Deleted சீன்ஸா? என்று கேட்கும் அளவிற்கு அமைந்துள்ளது..

LATEST News

Trending News

HOT GALLERIES