ஹீரோவாக ஜெயித்த ஜெய்: ரசிகர்களின் மாபெரும் வரவேற்பில் 'எண்ணித்துணிக'!
ஜெய் நடித்த ’எண்ணித்துணிக’ திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
காதலர்களான ஜெய் மற்றும் அதுல்யா ரவி திருமணத்திற்கு நகை வாங்க அமைச்சரின் நகை கடைக்கு சென்றபோது அங்கு ஒரு விபரீதம் ஏற்படுகிறது. அதன் பின்னர் ஜெய் எடுக்கும் துணிச்சலான நடவடிக்கை தான் ’எண்ணித்துணிக’ படத்தின் கதை.
இந்த படத்தின் நாயகனாக ஜெய் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தனது அதிரடி ஆக்சன் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்பதும் அவரது நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ் ஆக அமைந்துள்ளது என்றும் படம் பார்த்தவர்கள் கூறி வருகின்றனர்.
இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக மீண்டும் ஜெய் ஜெயித்துள்ளார் என்று சொல்லலாம். இந்த படத்தின் வெற்றி அவருடைய திரையுலக வாழ்வில் மிகப்பெரிய ஒரு திருப்பமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் ஜெய் நடித்த ’எண்ணித்துணிக’ திரைப்படம் அனைத்து ஆக்சன் ரசிகர்களுக்கும் விருப்பமான ஒரு படமாக அமைந்துள்ளது.
வழக்கமான பழிவாங்கும் கதையாக இருந்தாலும் காதல் மற்றும் குற்ற உலகத்தை கச்சிதமாக இணைத்து கதையை சிறப்பாக நடத்தி இருக்கிறார் இயக்குனர் எஸ்.கே.வெற்றிச் செல்வன்.