கோபத்தை கட்டுப்படுத்த சன்னிலியோன் செய்த செயல்: வைரல் வீடியோ

கோபத்தை கட்டுப்படுத்த சன்னிலியோன் செய்த செயல்: வைரல் வீடியோ

கோபத்தை கட்டுப்படுத்துவதற்காக நடிகை சன்னிலியோன் செய்த செயல் குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தமிழில் ‘ஓ மை கோஸ்ட்’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை சன்னிலியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 53 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ளார் என்பதும் இவரது ஒவ்வொரு பதிவும் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் அவரது ஃபாலோயர்கள் அறிந்ததே.

இந்த நிலையில் சன்னி லியோன் நடித்து வரும் ’ஷீரோ’ என்ற படத்தின் படப்பிடிப்பு காட்டுப்பகுதி ஒன்றில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அவர் திடீரென கோபத்தில் ஒரு மரத்தை மிக ஆக்ரோஷமாக வெட்டுவது போன்ற வீடியோவை பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோவுக்கு கேப்ஷனாக, ‘நீங்கள் கோபத்தில் இருக்கும்போது இது போன்ற கடினமான வேலையை செய்தால் கோபம் மறைந்துவிடும் என்று அவர் பதில் சொல்லியுள்ளார். மேலும் இந்த பதிவின் பின் குறிப்பில் ’இங்கு எந்தவிதமான மரங்களும் துன்புறுத்தப்படவில்லை’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

LATEST News

HOT GALLERIES