தனுஷ் பிறந்த நாள்: ரசிகர்களுக்கு செம அப்டேட் கொடுத்த கலைப்புலி எஸ்.தாணு

தனுஷ் பிறந்த நாள்: ரசிகர்களுக்கு செம அப்டேட் கொடுத்த கலைப்புலி எஸ்.தாணு

நாளை தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற இருக்கும் நிலையில் அவரது ரசிகர்கள் பிறந்தநாளை மிகவும் சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் நாளை தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு மாலை 6 மணிக்கு ‘வாத்தி’ படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் தனுஷ் நடித்து வரும் இன்னொரு திரைப்படமான ’நானே வருவேன்’ படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தனுஷூக்கு பிறந்தநாள் வாழ்த்து  தெரிவித்து முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

நாளை பிறந்தநாள் காணும் திரு தனுஷ் மென்மேலும் பல உயரங்கள் தொட்டு, சிறப்போடு வாழ என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த நாளை மேலும் சிறப்பாக்க ’நானே வருவேன்’ திரைப் படத்தின் போஸ்டரை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறியதோடு, அட்டகாசமான போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

இந்த போஸ்டரில் தனுஷ் ஸ்டைல்ஷாக இருக்கிறார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருவதாகவும் இந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படம் தனுஷின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

HOT GALLERIES