மாஸ் காட்டிய ஏ.ஆர்.ரகுமான் - டிரம்ஸ் சிவமணி: 'பொன்னியின் செல்வன்' சூப்பர் அப்டேட்!

மாஸ் காட்டிய ஏ.ஆர்.ரகுமான் - டிரம்ஸ் சிவமணி: 'பொன்னியின் செல்வன்' சூப்பர் அப்டேட்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கும் நிலையில் தற்போது இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரடொக்சன்ஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சற்று முன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் மற்றும் ட்ரம்ஸ் சிவமணி ஆகியோர் பின்னணி இசை அமைத்துக் கொண்டிருக்கும் காட்சிகள் உள்ளன. இந்த மாஸ் காட்சியின் வீடியோ தற்போது இணைய தலங்களில் வைரலாகி வருகிறது

மேலும் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் சிங்கிள் பாடல் வெகு விரைவில் ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். எனவே சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

LATEST News

HOT GALLERIES