ரஜினி மகளிடம் 'ஏகே 61' அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்: எல்லாத்துக்கும் இந்த புகைப்படம் தான் காரணமா?

ரஜினி மகளிடம் 'ஏகே 61' அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்: எல்லாத்துக்கும் இந்த புகைப்படம் தான் காரணமா?

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படத்தின் அப்டேட்டை கடந்த ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட பலரிடம் அஜித் ரசிகர்கள் கேட்ட தகவல்கள் இணையதளங்களில் வைரலானது. இந்த நிலையில் அஜித் தற்போது நடித்து வரும் ’ஏகே 61’ என்ற படத்தின் அப்டேட்டை அஜித் ரசிகர்கள் ரஜினி மகள் ஐஸ்வர்யாவிடம் கேட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை சந்தித்துள்ளார். அவருடன் ஒரு காபி அருந்தியதாகவும் அவருடன் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் போனிகபூருடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த பதிவின் கமெண்ட்டில் அஜித் ரசிகர்கள் ’ஏகே 61’ படத்தின் அப்டேட்டை போனிகபூர் ஏதாவது உங்களிடம் சொன்னாரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது பாலிவுட் படம் ஒன்றை இயக்கி வரும் நிலையில் போனிகபூரை அவர் சந்தித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போனிகபூர் தயாரிப்பில் ஐஸ்வர்யா ஒரு படம் இயக்குவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

LATEST News

HOT GALLERIES