ஒரு பெரிய இரும்பு டோரை ஓப்பன் பண்ண ஒரு சின்ன சாவி போதும்: சிபிராஜின் 'வட்டம்' டிரைலர்

ஒரு பெரிய இரும்பு டோரை ஓப்பன் பண்ண ஒரு சின்ன சாவி போதும்: சிபிராஜின் 'வட்டம்' டிரைலர்

சிபிராஜ் நடித்த ‘வட்டம்’ திரைப்படம் வரும் 29ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த ட்ரெய்லரில் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞன் ஒருவனின் வாழ்க்கையில் ஏற்படும் திடீர் மாற்றம், அவனது வாழ்க்கையை எப்படி புரடி போடுகிறது என்ற கதையம்சம் கொண்டது. 24 மணி நேரத்தில் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடைபெறும் கதையம்சம் தான் இந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி, பால சரவணன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கமலக்கண்ணன் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே ’மதுபானக்கடை’ என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிவாஸ் கே பிரசன்னா இசையில் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் சிபிராஜின் அடுத்த வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES