அஜித்தின் ஐரோப்பா பயணத்தில் முக்கிய திருப்பம்: வைரல் புகைப்படங்கள்!

அஜித்தின் ஐரோப்பா பயணத்தில் முக்கிய திருப்பம்: வைரல் புகைப்படங்கள்!

அஜித் கடந்த சில நாட்களாக ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்றும் பைக்கில் சுற்றுப்பயணம் செய்துவரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அஜீத் நடித்து வரும் ’ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருவதாகவும் அஜித் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இம்மாதம் இறுதியில் ஐரோப்பா பயணத்தை முடித்துவிட்டு அஜித் சென்னை திரும்புவார் என்று கூறப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக தற்போது அஜித் சென்னை திரும்பி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானநிலையத்தில் அஜித் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் தற்போது ’ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் விரைவில் படக்குழுவினர் புனே செல்ல உள்ளதாகவும் அங்கு அதிரடி ஸ்டண்ட் காட்சிகள், பைக் சேசிங் காட்சிகள் உள்பட பல காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித், மஞ்சுவாரியர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தை எச் வினோத் இயக்கி வருகிறார் என்பதும் ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தை போனிகபூர் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

HOT GALLERIES