'தி லெஜண்ட்' படத்திற்காக சரவணன் எடுத்துள்ள புதிய முயற்சி: வீடியோ வைரல்

'தி லெஜண்ட்' படத்திற்காக சரவணன் எடுத்துள்ள புதிய முயற்சி: வீடியோ வைரல்

பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ தி லெஜண்ட்’ திரைப்படம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ் ,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் - இந்தியா திரைப்படமாக வெளியாகும் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த பல வருடங்களாக தொழிலதிபராக இருந்து வரும் லெஜண்ட் சரவணன் சமூக வலைதளங்களில் இதுவரை இல்லாத நிலையில், ‘தி லெஜண்ட்’ படத்திற்காக புதிய முயற்சியாக சமூகவலைதளமான டுவிட்டரில் கணக்கை தொடங்கியுள்ளார்.

அந்த டுவிட்டர் பக்கத்தில் அவர் ’தி லெஜண்ட்’ படத்தில் இடம் பெற்றுள்ள அதிரடி ஸ்டண்ட் காட்சிகளின் வீடியோவை பதிவு செய்துள்ளார் என்பதும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களுக்கு இணையாக இந்த ஸ்டண்ட் காட்சிகளை ரசிகர்கள் பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளனர். குறிப்பாக ஹாரிஸ் ஜெயராஜின் அதிரடியாக பின்னணி இசை அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.

லெஜண்ட் சரவணன், ஊர்வசி ரெளட்டாலா, விஜயகுமார், பிரபு, விவேக், சுமன், நாசர், லிவிங்ஸ்டர்ன், யோகிபாபு, ரோபோ சங்க உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

LATEST News

HOT GALLERIES