தனுஷூக்கு புதிய பட்டம் கொடுத்த நடிகை சமந்தா: என்ன பட்டம் தெரியுமா?

தனுஷூக்கு புதிய பட்டம் கொடுத்த நடிகை சமந்தா: என்ன பட்டம் தெரியுமா?

திரைலகில் உள்ள பல நடிகர்கள் தங்கள் பெயருக்கு முன் பட்டங்களை வைத்துக்கொண்டு இருப்பது வழக்கமாக இருந்து வருகிறது. மக்கள் திலகம், நடிகர் திலகம் முதல் தளபதி வரை பல நடிகர்கள் இந்த பட்டங்களை திரையுலகில் பயன்படுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் பல வெற்றிப்படங்களை கொடுத்த தனுஷ் இதுவரை எந்தப் பட்டத்தையும் தன்னுடைய பெயருக்கு முன் பயன்படுத்தாமல் இருந்த நிலையில் தற்போது நடிகை சமந்தா அவருக்கு ஒரு பட்டத்தை வழங்கியுள்ளார்

பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் நடத்தும் ’காபி வித் கரன்’ என்ற நிகழ்ச்சியில் அவர் பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்தார். அப்போது அவர் தனுஷ் குறித்து ஒரே ஒரு வார்த்தையில் கூறும் படி கேட்க அதற்கு சமந்தா, ‘குளோபல் ஸ்டார்’ என கூறியுள்ளார்

தனுஷ் தற்போது கோலிவுட், பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் நடித்துள்ளார் என்பதும் அவர் ஹாலிவுட்டில் நடித்துள்ள ’தி க்ரேமேன்’ என்ற திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது என்பதும் தெரிந்ததே. இதனை அடுத்தே அவர் ’குளோபல் ஸ்டார்’ என்ற பட்டத்தை சமந்தா கொடுத்துள்ளதாக தெரிகிறது

இந்த நிலையில் சமந்தா கொடுத்த ‘குளோபல் ஸ்டார்’ படத்தை தனுஷ் அடுத்தடுத்த படங்களில் பயன்படுத்துவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LATEST News

HOT GALLERIES