படத்தை விமர்சனம் செய்ய ரூ.3 லட்சம் கேட்டாரா புளுசட்டை மாறன்? பார்த்திபனின் ஆடியோ வைரல்!

படத்தை விமர்சனம் செய்ய ரூ.3 லட்சம் கேட்டாரா புளுசட்டை மாறன்? பார்த்திபனின் ஆடியோ வைரல்!

பிரபல திரைப்பட விமர்சகர் புளுசட்டை மாறன் படத்தை விமர்சனம் செய்ய மூன்று லட்ச ரூபாய் ஒரு தயாரிப்பாளரிடம் கேட்டதாக நடிகர் இயக்குனர் பார்த்திபன் ஆடியோ ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான்லீனியர் திரைப்படம் என்று விளம்பரம் செய்யப்பட்ட ’இரவின் நிழல்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பெரும்பாலான ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதள பயனாளர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து வருகின்றனர்.

இந்த நிலையில் திரைப்பட விமர்சகர் புளுசட்டை மாறன் இந்த படத்தை விமர்சனம் செய்யும்போது இது முதல் சிங்கிள் ஷாட் நான்லீனியர் படம் அல்ல என்றும் இதற்கு ஈரானிய ய படம் ஒன்று சிங்கிள் ஷாட் நான்லீனியர் படமாக வந்திருக்கிறது என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து பார்த்திபன் மற்றும் புளுசட்டை மாறன் ஆகிய இருவருக்கும் இடையே வாத விவாதங்கள் சமூக வலைதளங்கள் மூலம் நடந்து வந்தது. இந்த நிலையில் இயக்குனர் பார்த்திபன் வெளியிட்டுள்ள ஆடியோ ஒன்றில் புளுசட்டை மாறன் தனது படத்தை விளம்பரம் செய்ய ரூ 3 லட்சம் ரூபாய் கேட்டதாக தயாரிப்பாளர் ஒருவர் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு புளுசட்டை மாறன் தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலுடன் மூன்று லட்ச ரூபாய் என சின்ன அமௌண்டை சொல்லி தன்னை அந்த தயாரிப்பாளர் அசிங்கப்படுத்தி விட்டார் என்றும் ஒரு கோடி ரூபாய் என்று அவர் சொல்லி இருக்கலாம் என்றும் பதிவு செய்திருப்பதும் பரபரப்பு ஏற்பட்டது.

LATEST News

HOT GALLERIES